கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருப்பவர் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அந்த பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு பள்ளி சீரமைக்கப்பட்டது இதற்காக அந்த பள்ளியின் முன் பகுதியில் கல்வெட்டு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கல்வெட்டு வைத்திருந்தார்கள்.
இதனிடையில் சென்ற வாரம் ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார் அவர் வந்து சென்ற பிறகு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டு நீக்கப்பட்டதாக கூறுகின்றனர் இதனால் கோபம் அடைந்த ரஜினி ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இது ரஜினி அரசியல் வருவதற்கு முதல் படி என்று கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள். இதை எதிர்பார்க்காத தி.மு.க என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகின்றன. ரஜினி அ.தி.மு.கவை விமர்ச்சிப்பர் என்று எதிர்பார்த்த தி.மு.க வின் கனவு தலைகீழானது இது தி.மு.க வினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.