வெளிநாட்டு போட்டிருக்கு கிரிக்கெட் வீரர்களுடன் மனைவியை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த பெண்கள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சானியா மிர்சா பத்திரிகையாளர்களிடம் கூறியது
நமது கிரிக்கெட் அணி மற்றும் பல விளையாட்டு அணியினர் போட்டிகளுக்காக வெளிநாடு செல்வது வழக்கம் ஆனால் அவர்கள் செல்லும் போது அவர்களுடன் அவர்களது மனைவியை அல்லது காதலியை அழைத்து செல்ல அனுமதிப்பதில்லை.
இதை நான் பல தடவை கண்டு இருக்கிறேன். இவர்கள் உடன் அழைத்து சென்றால் வீரர்களின் கவனம் சிதறும் என்று காரணம் சொல்வார்கள்.
வாழ்க்கை துணை உடன் இருக்கும் போது விளையாடி விட்டு வந்து அவர்களை எவ்வளோ ஆனந்தமாக இருக்கும் என்பதை பாருங்கள். விராட் கோலி சரியாக ஆடாத போது, அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை விமர்சனம் செய்வது முட்டாள்தானம் .
இவ்வாறு கூறினார் சானியா மிர்சா.