ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்தது. அவரது சி.பி.ஐ விசாரணை இன்று முடிந்தது. உள்ளார். சி.பி.ஐ.யை தொடர்ந்து இந்த மோசடி வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். டெல்லி உயர்நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது.
இதையடுத்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அவர்கள், ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர்.
அந்த தீர்ப்பில் நீதிபதிகள், “இந்த வழக்கு சரியான பாதையில் செல்கிறது. முன்ஜாமின் என்பது அடிப்படை உரிமை கிடையாது. வழக்கு தொடக்க நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன்ஜாமின் வழங்கினால், அது விசாரணையை பாதிக்கும். இதனால், இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க இயலாது. பொருளாதார குற்றங்களை வேறு வழியில்தான் கையாள வேண்டும். விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

சி.பி.ஐயின் விசாரணைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை, வரும் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும், திஹார் ஜெயிலில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, திஹார் ஜெயிலில் அடைக்கப்படுவதை தவிர்க்க ப.சிதம்பரம், “அமலாக்கத்துறையிடம் நான் சரணடைய தயாராக இருக்கிறேன். என்னை அமலாக்கத்துறை காவலில் வைக்கட்டும்” என்றுகூறி நாடகமாடினார். அதனை நீதிபதி ஏற்கவில்லை.
திஹார் ஜெயிலுக்கு செல்வதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டதற்கு, “பொருளாதாரத்தை பற்றிதான் கவலைப்படுகிறேன்” என்று கிண்டலாக பதில் கூறினார்.
இதன் மூலம் ப.சிதம்பரம் இனி தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு திஹார் ஜெயில் உறுதியானது. போலீஸ் வேனில் ஏற்றி அவரை திஹார் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.
திஹார் ஜெயிலில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார். வெஸ்டர்ன் டாய்லட் வசதியுடன் கூடிய தனி அறையில் அவர் அடைக்கப்பட்டார்.
கனிமொழிக்கு பிறகு, திஹார் சென்ற வேட்டி கட்டிய தமிழன் என்ற பெருமையை ப.சிதம்பரம் பெற்றுள்ளார்.
கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி போன்ற உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ப.சிதம்பரத்திற்காக வாதாடினாலும், எவ்வளவு செல்வாக்கு பெற்றவராக அவர் இருந்தாலும், பண பலம், ஆள்பலம் அவருக்கு எவ்வளவு இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.