ஒடிசா மாநிலம், புரியில் உள்ள, ஜகன்னாதர் கோவிலுக்குள், வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் கொண்டு செல்வதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் பூரியில் புகழ் பெற்ற ஜகன்னாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெற்றிலை, புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பக்தர்கள் எச்சிலை கோவில் வளாகத்திலேயே துப்புகின்றனர்.
Loading...
இதனால் கோவில் அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதையடுத்து வெற்றிலை, புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மீறி நுழைந்து கோவில் வளாகத்தில் அசுத்தப்படுத்தினால் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தடை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.
Loading...