மேற்குவங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், ஆங்காங்கே சிறுபான்மை இன இளைஞர்களை ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று கோஷமிடக்கோரி தாக்குதல்கள் நடந்தபட்டதாக செய்திகள் வெளியாகின. இதில் பல்வேறு பிரச்சனைகளால் தாக்குதலுக்கு உள்ளனவர்களை ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தால் தான் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்று உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்பட்டன. இதில் இந்துமத அடிப்படைவாத அமைப்புகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையும் படிக்க : சிறுவர்களின் கிரிக்கெட் விளையாட்டு சண்டையை “ஜெய் ஸ்ரீராம்” சொல்ல சொல்லி அடித்ததாக செய்தி பரப்பினர்! ஊடகங்களின் முகத்திரை கிழிந்தது !!
இதனை அடுத்து ஹிந்து மத வெறுப்பாளர்களும், இடதுசாரி சிந்தனைகள் உள்ள பிரபலங்களும் சேர்ந்து பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். வழக்கம் போல் இதை ஊடகங்களும் பெரிதுபடுத்தியுள்ளன.
இதையும் படிக்க : “ஜெய் ஸ்ரீராம் கோஷம் தொடர்பான தாக்குதல்களுக்கு காங்கிரசே பொறுப்பு” – ஜமாத் இ உலமா தலைவர் அறிவிப்பு !!
பிரதமருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில், பெரும்பாலான மக்கள் போற்றும் ஜெய் ஸ்ரீராம் என்ற மந்திரத்தைப் ஆயுதமாக்கி போர் முழக்கமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த விளம்பர நாடகத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், நக்சலைட் தாக்குதல், தீவிரவாதிகள் காஷ்மீரில் பள்ளிகளைக் கொளுத்தும் போது ஏன் 49 பிரபலங்கள் மெளனம் காத்தனர் என கேள்வி எழுப்பி நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட 62 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
சர்வதேச அளவில் தேசத்தின் பெயருக்கும், பிரதமர் மோடியின் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் 49 பிரபலங்களின் கடிதம் அமைந்ததாகக் 62 பிரபலங்கள் கூறியுள்ளனர். ஜெய் ஸ்ரீராம் எனும் முழக்கமிடும் பக்தர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லையெனவும், அரசியல் சார்புடன் முந்தைய கடிதத்தில் சில பிரபலங்கள் நடந்துகொண்டதாகவும் கங்கனா ரனாவத், பிரசூன் ஜோஷி பென் உள்ளிட்ட 62 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு அந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
49 பிரபலங்கள் அனுப்பிய கடிதத்தை பெரிது படுத்திய தமிழக ஊடகங்கள், 62 பிரபலங்கள் அனுப்பிய பதில் கடிதத்தை பற்றி செய்தி வெளியிடவில்லை. பாலிமர் செய்திகள் மட்டுமே இந்த இரண்டு செய்திகளையும் நடுநிலையாக வெளியிட்டது.