இதுதொடர்பாக, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு அளித்துள்ள பதிலில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு பக்தை தன் குழந்தை இனிப்பு அதிகம் சாப்பிடுகிறான் நீங்கள் சொன்னால் நிறுத்திவிடுவான் என்கிறார். ஆனால் பரமஹம்சர் அச்சிறுவனை 4 முறை திரும்ப திரும்ப வரச்சொல்லி பின் இனிப்பு சாப்பிடாதே என்று கூறினார்.
இதை முதல் தடவையே கூறியிருக்கலாமே. ஏன் 4 முறை வரச் சொன்னீர்கள் என்று குழந்தையின் தாயார் கேட்டார். அதற்கு பரமஹம்சர், “நான் இனிப்பு அதிகம் சாப்பிடுவேன். அதை நிறுத்த 4 வாரங்கள் ஆனது. எனவே இன்று அறிவுரை கூறினேன்” என்றார். தங்கள் குழந்தைகளுக்கு 3 மொழி கற்பிப்பவர்கள் மும்மொழி கொள்கையை எதிர்ப்பது நேர்மையற்ற செயல். ஏற்க முடியாது.
தாங்களே இந்தி பயிற்றுவிக்கும் பள்ளிகளை நடத்துபவர்கள் அல்லது தங்கள் குழந்தைகளுக்கு இந்தி சொல்லிக் கொடுப்பவர்கள். ஏழை குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பை இலவசமாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் எவ்வித நியாயமுமில்லை. இதைக் கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.
கேள்வி : முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?
பதில் : கஸ்தூரி ரங்கன் கமிட்டி நாடு முழுவதிலும் இருந்து யோசனைகள் கேட்டு 2 ஆண்டுகள் கழித்து அறிக்கை தந்துள்ளது. 2 ஆண்டுகள் அவசரமா? இப்போது பேசுபவர்கள், 2 ஆண்டுகளாக எங்கே இருந்தனர்?
ஆனால் இன்று தமிழகத்தில் பலரும் ஏதோ தேசிய கல்விக் கொள்கை புதிதாக இன்று உருவாக்கப் பட்டுள்ளது போல் பேசி வருகின்றனர்.
தேசிய கல்விக்கொள்கை 2019 பற்றி அதன் பெயரையே தவறாக புரிந்து கொண்டு பலரும் பேசி வருகின்றனர். இது புதிய கல்விக் கொள்கை அல்ல. 1986, 1992 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை கழைவதற்காக 2019 வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Internet மற்றும் digital கல்வியும் கல்வித் திட்டத்தில் சேர்க்கவும் ஏழை, கிராமப்புற மற்றும் பழங்குடியினருக்கும் கல்வி சென்றடைய இந்த தேசிய கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கேள்வி : மூன்று வயது குழந்தையால் மும்மொழி படிக்க முடியுமா?
பதில் : மும்மொழி கல்விக் கொள்கை ஏற்கனவே அமலில் உள்ள தேசிய கல்விக்கொள்கையிலும் உள்ளது.
3-6 வயதில் குழந்தைகளுக்கு கற்கும் திறன் அதிகம். 30000 மாணவர்களைக் கொண்டு பரிசோதித்ததன் முடிவின் ஆதாரம். NEP 2019 வரைவு, பக்கம் 45 & 46 இல் உள்ளது. படித்து தெரிந்து கொள்ளலாம்.
மும்மொழியா, இல்லை இரு மொழியா? சமமான கல்வியா அல்லது சமச்சீர் கல்வியா? ஏதாகிலும் தான் பின்பற்றாததை போதிப்பது நேர்மையான செயல் அல்ல என்பது என் கருத்து.
கேள்வி : நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப்போகின்றதே இதற்கு பதில் என்ன?
பதில் : ஓர் ஆசிரியர் பள்ளியோ அல்லது 20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளோ மூடப்படாது. சிறிய பள்ளிகளும் பொதுவான வசதிகளைப் பெற ஒரு உயர்நிலைப் பள்ளியை சுற்றியுள்ள சிறிய பள்ளிகளைக் கொண்ட school complex உருவாக்கப்படும். இதை NEP பக்கம் 159 – இல் படித்து தெரிந்து கொள்ளவும்.
கேள்வி : கல்வியில் சிறந்த நாடுகளில் 8-ஆம் வகுப்பு வரை எந்த தேர்வும் இல்லை என்கிற நிலையில், 3,5,8 – ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது எப்படி சிறந்த கல்வியாகும்?
பதில் : 3,5,8, வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று எங்குமே சொல்லவில்லை. கற்பித்தல்-கற்றல் முறையினைத் திட்டமிட மாணவர்களின் முன்னேற்றத்தினை கணித்திட state census examinations நடத்தப்படும். NEP பக்கம் 107 – இல் பார்க்கவும்.
ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. மாணவர்களின் அறிவுத்திறனை கொண்டே ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அறியமுடியும். 3,5,8, வகுப்பு மாணவர்களுக்கு state census exam – இன் குறிக்கோளின் ஒரு பகுதியே இது.
கேள்வி : நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வு, தகுதித் தேர்வு, நீட் தேர்வு என்று மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதிக் கொண்டிந்தால் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது?
கேள்வி : சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரேயொரு ஆசிரியர் அமைப்பும், ஒரேயொரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விகிதத்தில் நியாயம்?
பதில்: 2017 – ஜூனில் நியமிக்கப்பட்ட குழு யோசனைகளை வரவேற்று “what began as trikle turned into an avalanche” பின்னரே வரைவு உருவாக்கப்பட்டது. 2 ஆண்டுகள் உறக்கம், இப்போதுதான் தெளிந்தது போலும்.
இப்படி மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தில் ஏராளமான நல்ல அம்சங்கள் இருந்தாலும், அவைகளை சரியாக படித்துப்பார்க்காமலும் அல்லது தவறானவர்களின் வழிகாட்டுத்தல்களால் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதுதவிர, உள்நோக்கத்துடனும் இதனை குறை கூறி வருகின்றனர். அதாவது, கஸ்தூரி ரங்கன் குழு அமைத்த போதே ஒரு சில குழுக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். Right to Education Act – இன் படி 25 சதவீதம் ஏழை மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இதற்கான கட்டணத்தை அரசு கட்டும். இதில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கு விலக்கு உள்ளது.
ஆனால், மத்திய அரசின் புதிய கல்வித் திட்டம் நடைமுறைக்கு வந்தால், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலும் ஏழை, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இதனால் சாதாரண ஏழை மாணவர்களுக்கு நன்மை உண்டாகும்.
இதனால்தான் கிறிஸ்தவ மிஷனரிகள், இதுபோன்ற நபர்களை தூண்டிவிட்டு எதிர்க்க சொல்கிறார்கள். அதற்கு சிலர் பலிகடா ஆகிவிடுகிறார்கள்.
இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019 பற்றிய ஹெச்.ராஜாவின் விளக்கம்…
நடிகர் சூர்யாவுக்கு கல்வியாளர் கொடுத்த அட்வைஸ்…