செய்திகள்

முத்தலாக் விவகாரத்தை மத கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது : இது பெண்ணுரிமை தொடர்பானது : காங்கிரசுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!

முத்தலாக் வழியாக விவாகரத்து செய்யப்படுவதைத் தடை செய்யும் குற்றவியல் சட்டம் பெண்ணுரிமையுடன் தொடர்பானது என்றும், இதை மத கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாதும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இதனைச் செய்யத் தவறிய காங்கிரஸ், தமது அரசாங்கத்தின் முயற்சிக்கு இடையூறு விளைவிக்க முயலக் கூடாது எனவும் அவர் கூறினார். 

உயரப் பறக்கும் காங்கிரஸ், உண்மையில் நடைமுறை உண்மைகளைப் புரிந்துகொள்ளத் தவறுவதாகத் மோடி தெரிவித்தார்.1950களில் அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான குடியுரிமை சட்டத்தை அறிமுகம் செய்ய காங்கிரஸ் தவறியதை அவர் சுட்டினார்.

முத்தலாக் விவாகரத்தைத் தடை செய்யும் சட்ட மசோதாவின்படி, குற்றம் இழைக்கும் ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிப்பதைப் பெரும்பாலான கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இத்தகைய தண்டனை முஸ்லிம் ஆடவர்களுக்குப் பாதகமானது என்பது அவர்களது வாதமாக உள்ளதே தவிர நமது நாட்டு பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுவதை அவர்கள் உணரவில்லை என்றார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close