Loading...
செய்திகள்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில்! ஆம்புலன்ஸூக்கு வழிவிடாவிட்டால் ரூ.10000 அபராதம்! புதிய சட்டம் விரைவில் வருகிறது!

ஏற்கெனவே அமலில் உள்ள மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு விதிமுறைகள் அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. அந்த சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த புதிய மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு: –

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் தற்போது தண்டனை எதுவும் இல்லை. ஆனால் இனி தண்டனை உண்டு. அதாவது பெற்றோர் அல்லது வண்டி உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும்.

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரமாக செல்லும் வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றால் 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதேபோல ஒவ்வொரு குற்றத்திற்கும் அதற்காக பழைய தண்டனையும், புதிய தண்டனையும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close