அரசியல்இந்தியாசெய்திகள்

“மோடியின் முகத்தில் விவேகானந்தரை காண்கிறேன்” – இந்தியில் பேசிய ரவீந்திரநாத் குமார்!

பாரளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுவாமி விவேகானந்தர், “எனக்கு வலிமையான 100 இளைஞர்களை தாருங்கள். இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்” என்றார். அந்த விவேகானந்தரைத்தான், நமது பிரதமர் மோடியின் முகத்தில் காண்கிறேன்.

அடுத்து, பகவத் கீதையில் இருந்து சில வரிகளை, ஹிந்தியில் பேசினார் ரவீந்திரநாத். அவர் இந்தியில் பேசியதன் தமிழாக்கம் வருமாறு: –

மிகப்பெரிய மனிதரின் செயல்களைத்தான், மக்கள் பின்பற்றுவார்கள். அவரின் தன்னிகரற்ற செயல்கள் மூலம் எத்தகைய இலக்கை நிர்ணயிக்கிறாரோ, அது இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கும்.

இவ்வாறு பகவத் கீதையை இந்தியில் மேற்கோள் காட்டி, பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பேசினார் ரவீந்திரநாத் குமார்.

இது பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்ந்தது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close