Loading...
செய்திகள்

சென்னையில் திடீர் மழை! மக்கள் மகிழ்ச்சி!!

சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் முதல் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் வெப்பத்தால் கொதித்த சென்னை குளிர்ச்சியடைந்தது.

இந்நிலையில், சென்னையில் வேளச்சேரி, பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், போரூர், அசோக் பில்லர், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், தரமணி, கந்தன்சாவடி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், நசரத்பேட்டை, உள்ளிட்ட பல இடங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, மதுராந்தகம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மழை பெய்தது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close