இந்தியாசெய்திகள்
Trending

திரிபுராவில் 85 சதவீத உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி வெற்றிக் கொடி பறக்கவிட்ட காவிகள் !! நாடெங்கும் பா.ஜ.க-வினர் குதூகலம்

திரிபுராவில் 85 சதவீத  உள்ளாட்சிகளை கைப்பற்றி பாஜக வரலாறு காணாத சாதனை !! கிராமங்கள் முழுவதும் பறக்கும் காவிக்கொடி

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தம் 6,646 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகிற 27ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இங்குள்ள 6 ஆயிரத்து 646 இடங்களை தேர்வு செய்ய மொத்தம் 12 லட்சத்து 3 ஆயிரத்து 70 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண்கள் 6 லட்சத்து 16 ஆயிரத்து 893 பேர், 5 லட்சத்து 86 ஆயிரத்து 176 பேர் பெண்கள் ஆவார்கள்.

 இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 646 இடங்களில் 5 ஆயிரத்து 652 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இது 85 சதவீதம் ஆகும். மீதி உள்ள இடங்களிலும் வருகிற 27ந்தேதி வருகிற தேர்தலில் பாஜகவினர் எதிர்கட்சிகளின் சவால்களை முறியடித்து மேலும் பல இடங்களை கைப்பற்றுவார்கள் என கூறப்படுகிறது. 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close