செய்திகள்தமிழ் நாடு

தொடர் தோல்வியால் விரக்தி அடைந்த நடிகர் சூர்யா! பிரபலம் அடைய நீட் தேர்வு குறித்து விமர்சனம்!

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் நடிகர் சூர்யா தற்போது மீடியாக்கள் தன்னை நோக்கி வருவதற்காக முயற்சிக்கிறார். புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து அரைகுறையாக தெரிந்து வைத்துக் கொண்டு விவரமில்லாமல் விமர்சித்த நடிகர் சூர்யா, ஒரு கட்டத்தில் ஆவேசப்பட்டு, நீட் தேர்வை விமர்சிக்க அச்சில் ஏற்ற முடியாத ‘ மயிறு’ மற்றும் பிடுங்கு போன்ற தவறான வார்த்தையை பயன்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீசிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேசன் சார்பில், பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கும் விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி மற்றும் கல்வியாளர் வசந்திதேவி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

மேடையில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் பொருத்தமற்றவகையில் விவரங்கள் இன்றி ஆவேசமாக பேசினார். அப்போது ஒரு கட்டத்தில் அச்சில் ஏற்ற முடியாத ‘ மயிறு தேர்வு’ என்கிற வார்த்தையை பயன்படுத்தி நீட் தேர்வை சூர்யா விமர்சித்தார்.

ஆனால் உடனடியாக தான் தவறான வார்த்தையை பயன்படுத்திவிட்டதாக கூறி வருத்தமும் தெரிவித்தார் சூர்யா. நீட் தேர்வுக்கு எதிரான கருத்தை பொது மேடையில் கூறும் போது சூர்யா பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அவருடைய தகப்பனார் நடிகர் சிவகுமாரும் பேசினார். முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் தன்னை செல்போனில் செல்பி எடுத்தவரை தாக்கி பேசியதுமல்லாமல் அவர் கையில் வைத்திருந்த செல்போனையும் ஒரு ரவுடி போல பாய்ந்து பிடுங்கி ஆவேசமாக எறிந்தார். இவர் மகன் சூரியாவும் சில ஆண்டுகளுக்கு முன்னால் அடையாறு பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரை இடித்தது மட்டுமல்லாமல் கார் டிரைவரை பல பேர் முன்பு தாக்கினார். அசிங்கமாகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளாளும் பொது மக்கள் முன்பாக பேசினார். இது அவருக்கு எதிராக சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருடைய இமேஜும் பாதிக்கப்பட்டது. இப்போது பொது கூட்டத்தில் பேசக் கூடாத வார்த்தையை பேசிவிட்டு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார். இப்படி அவருடைய குடும்பமே ஒரு முரட்டுக் குடும்பம் போல நடந்து வருவது அவர்களுடைய இமேஜை சரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் இது தன்னை விளம்பரபடுத்துவதற்காக தான் மேடையில் சூர்யா இப்படி பேசினார் என் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

Tags
Show More

2 Comments

  1. ஆமா இவ்வளவு அக்கரையாக அரசு பள்ளி பற்றி பேசும் சூர்யா தன் பிள்ளைகள அரசு பள்ளில சேர்திருக்கலாம் ஆனா அவரு சிபிஎஸ்சி பாடதிட்டம் உள்ள தனியார் பள்ளில பிள்ளைங்கள படிக்க வைத்து விட்டு இங்கு வந்து உபதேசமா?? விளம்பரத்துக்காக மேடைல இப்படி எய வேனா விமர்சிக்கலம்னு நினச்சுட்டாரு போல தொடர் தோல்வி மற்றும் அகரம் அமைப்பு பண வரினால வந்த கோபம்தான் இது

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close