செய்திகள்தமிழ் நாடு

வரும் ஆண்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள் : அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் கடந்தாண்டு 38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.

நீட் தேர்வு என்பது சுலபம் அல்ல என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், அடுத்தாண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்றார்.  அதற்கான பயிற்றுவிப்பு நடவடிக்கைகள் பல்வேறு அரசு உதவிகளுடன் செய்யப்பட்டு வருகிறது என்றார்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close