செய்திகள்
Trending

பா.ஜ.க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: திருமயம் அருகே நடந்தேறிய கொலை வெறி

திருமயம் அருகே, பா.ஜ.க,வின் வெளிநாடு பிரிவு மாவட்ட தலைவரின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். திருமயம் அருகே நம்பூரணிப்பட்டியில் உள்ளது, பா.ஜ.க பிரமுகர் நடராஜனின் வீடு. நேற்று இரவு அவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். நடராஜன் அளித்த புகாரின் பேரில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நடராஜன் கட்சி பணிகளை தீவிரமாக செய்து வந்தவர் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நன்கு பணியாற்றியவர். தேர்தல் முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close