சினிமா
Trending

3 மாதங்களாக தமிழ் திரையுலகத்திற்கு கலெக்ஷன் இல்லையாமே ?

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் எப்போதும் தரமான திரைப்படங்களை வழங்கும் தமிழ் திரையுலகம், கடந்த மூன்று மாதங்களாக நல்ல திரைப்படங்கள் எதுவும் இல்லாமல் திரையரங்குகளுக்கு கலெக்ஷன் மிகவும் குறைவாகியுள்ளதாக தெரிகிறது. பிரபல திரைப்பட விமர்சகர் பிரஷாந்த் ரங்கசாமி ட்விட்டரில் பதிவிடுகையில், “வெற்றிநடை போடுகிறது என்று செய்தித்தாள்களில் தான் இருக்கிறதே தவிர, மிக குறைந்த அளவு ரசிகர்களே திரையரங்குகளுக்கு வருகின்றனர். ஒரு நல்ல திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது தமிழ் திரையுலகம். அந்த திரைப்படம் வெளியாகி நம்பிக்கையை ஏற்படுத்தும்”, என்று பதிவிட்டுள்ளார்.

இதை உறுதிபடுத்தியுள்ள பிரபல திரையரங்கின் உரிமையாளர், 3 மாதங்களாக எந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

போராட்டங்களை தூண்டும் வகையில், மக்களை மூளை சலவை செய்யும் வகையில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாவதால், மக்களுக்கு அது போன்ற படங்கள்பிடிக்கவில்லை என்று பேசப்படுகிறது. என்.ஜி.கே போன்ற மொக்கை திரைப்படங்களை அடுத்தடுத்து கொடுத்ததால் நடிகர் சூர்யா விரக்தியில் உள்ளதாகவும் அதற்காக தனது இருப்பை காட்டிக்கொள்ள நீட் தேர்வை விமர்சித்து, அசிங்கமான வார்த்தையை மேடையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : தொடர் தோல்வியால் விரக்தி அடைந்த நடிகர் சூர்யா! பிரபலம் அடைய நீட் தேர்வு குறித்து விமர்சனம்!

தல அஜித் மற்றும் ரங்கராஜ் பாண்டே நடிப்பில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படம் வெளியானால் திரையரங்குகளுக்கு கலெக்ஷன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close