செய்திகள்தமிழ் நாடு

துபாயில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த தமிழக முஸ்லீம் இளைஞர்கள்! துபாயில் கிடைத்த முக்கிய தகவல்!

துபாயில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த தமிழக முஸ்லீம் இளைஞர்கள்! துபாயில் கிடைத்த முக்கிய தகவல்!

இலங்கையில் உள்ள தேவாலயங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்குப் பின், சர்வதேச பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்., ஆதரவாளர்களை, இந்திய எல்லைக்குள் கண்டறிந்து ஒடுக்கும் நடவடிக்கையை, மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன், கோவை நகரின் பல இடங்களில் சோதனை நடத்திய, தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், 10 பேரிடம் விசாரணை நடத்தி, இருவரை கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை, நாகையில், நேற்று சோதனைகள் நடந்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிடைத்த, உளவுத் தகவல் அடிப்படையிலேயே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் இருந்து குறிப்பாக, சென்னை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, துபாய் சென்று பணியாற்றும், ஒரு பிரிவு இளைஞர்கள் சிலர், அங்கு ரகசியமாக, ‘வாட்ஸ் ஆப்’ குழுவை ஆரம்பித்து, தகவல்களை பரிமாறி வந்துள்ளனர்.

உளவு தகவல்களின் அடிப்படையில், அக்குழுவில் ஊடுருவி, பல நாட்களாக கண்காணித்த, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்வாகத்தினர், சர்வதேச பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்.,க்கு ஆதரவான கருத்துக்களை, அந்த இளைஞர்கள் வெளியிட்டிருந்ததையும், சில தியாகங்கள் செய்ய தயாராக வேண்டும் என்று, பகிர்ந்திருந்ததையும் கண்டுபிடித்தனர். அதன்பின், 15 பேரை கைது செய்த, அந்நாட்டு அரசு, அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் சோதனை நடத்தி, ஆதாரங்களையும் கைப்பற்றியது. பின்,
இத்தகவல்களை அங்குள்ள, இந்திய துாதரகத்துக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கதேச நபர்கள் சிலரும், தமிழக இளைஞர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்தே, தமிழகத்தில் சந்தேக நபர்களின் வீடுகளில், என்.ஐ.ஏ., சோதனை நடத்தியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இலங்கை தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, சந்தேக நபர்களின் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன.
பயங்கரவாத ஆதரவு செயல்களுக்கான நிதி உதவி, உறுப்பினர் சேர்ப்பு, சதி வேலைக்கு துணை புரிதல் போன்றவற்றை ஒடுக்குவதே, இந்நடவடிக்கையின் நோக்கம். இளைஞர்களின் சமூக வலைதள பதிவுகளை நோட்டமிடும் கும்பல், பயங்கரவாத ஆதரவு எண்ணம் உடையவர்களை தேர்வு செய்து, ‘வாட்ஸ் ஆப்’ குழுவில் இணைத்து, கிளர்ச்சி எண்ணத்தை உணர்வுப்பூர்வமாகத் துாண்டுகின்றன.பின், அவர்களை, அன்னிய மண்ணுக்கு வேலை வாய்ப்புக்கு எனக்கூறி அழைத்துச் சென்று, மூளைச் சலவை செய்து, பயங்கரவாத செயல்களுக்கு தயார்படுத்துகின்றனர். ஆரம்பத்திலேயே, இதை ஒடுக்குவதற்கான நடவடிக்கையை, என்.ஐ.ஏ., மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வசிக்கும், நுாற்றுக்கணக்கான இளைஞர்கள், கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்தியாவில் சதி திட்டம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த, அன்சருல்லா என்ற பயங்கரவாதி திட்டமிட்டுள்ள தகவல் கிடைத்துள்ளது.


சிக்கியது என்ன?

அதன் வாயிலாக, இங்கு, இஸ்லாமிய ஆதரவு ஆட்சியை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்த, சென்னையை சேர்ந்த சையது புகாரி, நாகையை சேர்ந்த ஹசன் அலி யூனுஷ் மரைக்காயர் மற்றும் முகமது யூசுப்தீன் ஹரிஷ் முகமத் உள்ளிட்டோர், நிதி சேகரிப்பதற்கான, ஆயத்த பணி மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒன்பது மொபைல் போன்கள், 15 ‘சிம்’ கார்டுகள்; ஏழு, ‘மெமரி’ கார்டுகள்; 3 மடிக்கணினி; ஐந்து, ‘ஹார்டு டிஸ்க்’ ஆறு, ‘பென்டிரைவ்,’ 2 கையடக்க கணினி, மூன்று டி.வி.டி., மற்றும் பதாகைகள், ‘நோட்டீஸ்’ உள்ளிட்டவை, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. என தகவல் கிடைத்துள்ளது
நன்றி : தினமலர்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close