செய்திகள்
Trending

வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் கயிறுகள் கட்டப்பட்டு மீட்பு !! உரிய நேரத்தில் காப்பாற்றிய குஜராத் வனத்துறையினர் !

குஜராத் மாநிலம் வதோராவில் வெள்ளத்தில் சிக்கிய நான்கு குரங்குகளை வனத்துறையினர் மீட்டனர். 

விநியாட் என்ற கிராமத்தில் வெள்ளத்திலிருந்து தப்பியோடிய குரங்குகள் மரம் ஒன்றில் தஞ்சம் அடைந்து கடந்த சில நாட்களாக பசியாக கிடந்தன. 

மரத்தை சுற்றிலும் கடந்த சில நாட்களாக வெள்ளம் சென்று கொண்டிருந்ததால் அவைகளால் மரத்தைவிட்டு இறங்கி தப்பிச்செல்லவும் முடியவில்லை. 

இதைப் பார்த்த கிராம மக்கள் தகவல் அளித்தவுடன் வனத்துறையினர் அங்கு சென்று மரங்களுக்கிடையே கயிறு கட்டினர். புத்திசாலிக் குரங்குகள் கயிறுகளை பற்றிக் கொண்டு பாதுகாப்பாக வெள்ளம் இல்லாத இடத்துக்கு வந்து சேர்ந்தன.  பசி, களைப்புடன் அந்த குரங்குகளுக்கு மக்கள் உணவளித்தனர். அதன் பிறகு அவை காட்டுக்குள் சென்றுவிட்டன. 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close