செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தை பெருக்கி சுத்தம் செய்த மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர், பா.ஜ.க எம்.பி.ஹேமமாலினி!! சபாநாயகர் பாராட்டு

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதிதுறை அமைச்சர் அனுராக் தாகூர் , பா.ஜ.க எம்.பி.ஹேமமாலினி மற்றும் பாஜக எம்.பிக்கள் சிலரும் இந்த பணியில் ஈடுபட்டனர். ஏதோ ஒப்புக்காகவோ அல்லது விளம்பரத்துக்காவோ இல்லாமல் முழுமையான ஈடுபாடுடன் சில மணிநேரங்கள் அப்பணியை செய்தார் ஹேமமாலினி. இதற்காகவே துப்புரவு பணியாளர்கள் போல சட்டை அணிந்து அவர் முழு மனதுடன் பணியாற்றியது அனைவரையும் நெகிழ வைத்தது.  

பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஹேமமாலினி எங்களின் முயற்சியை நாடாளுமன்ற சபாநாயகர் பாராட்டியுள்ளார். அடுத்த வாரம் எனது தொகுதியான மதுராவிற்கு செல்கிறேன். அங்கும் தூய்மை இந்தியா திட்டத்தை மேற்கொள்ளப் போகிறேன் என தெரிவித்தார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close