சமூக ஊடகம்செய்திகள்
Trending

ஸ்டாலின் யார் என்றே எனக்கு தெரியாது : உண்மையை போட்டு உடைத்த ஐ.நா சபை முன்னாள் பொது செயலாளர் – அசிங்கப்பட்ட உடன் பிறப்புகள் #FakeNews

“நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர். தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சனைகள் குறித்தே பேசினார். அவரின் நீண்டகால அரசியல் திட்டங்கள் குறித்த பேச்சுக்களை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பெடுத்து, அதனை இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். இப்படிபட்ட தலைவர் மற்ற நாடுகளில் இருந்திருந்தால் அவரை உலகமே தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும்”, என்று ஐ.நா சபை முன்னாள் பொது செயலாளர் திரு ஜான் எலியாசன் எழுதியுள்ளதாக உடன் பிறப்புகள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Screenshot from Sundar Nathaman’s FB post.

இந்த பதிவை பார்க்கும் போதே, உடன் பிறப்புகள் பரப்பும் வதந்திகளில் இதுவும் ஒன்று என்பது அனைவருக்கும் எளிதில் புரிந்துவிடும். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, ஜான் எலியாசன் அவர்களை டேக் செய்து ட்விட்டர்வாசி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்து, அப்படி ஒரு மனிதரை பற்றி எனக்கு தெரியவே தெரியாது என்று கூறியுள்ளார்.

ஸ்டாலின், டி.ஆர் பாலு ஆகியோருடன் ஜான் எலியாசன் இருக்கும் புகைப்படம் போட்டோஷாப்பாக இருக்குமோ என்று சற்று தேடிப்பார்த்தால், அது டி.ஆர் பாலு அவர்களின் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பகிறப்பட்டுள்ளது. அதை காண இங்கே கிளிக் செய்யவும்.

Screenshot from T.R Baalu website

மு.க ஸ்டாலினை ஜான் எலியாசன் யார் என்றே தெரியாது என்று தற்போது கூறியுள்ள நிலையில், போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை தான் டி.ஆர். பாலு அவர்களின் இணையதளத்தில் பயன்படுத்தி உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, உடன் பிறப்புகள் பரப்பி வந்த வதந்தியை பலரும் கிண்டலடித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இனிமேலாவது உடன் பிறப்புகள் இணையத்தில் வதந்திகளை பரப்பாமல் இருப்பார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Tags
Show More

2 Comments

  1. எனக்கு மோடியைத் தெரியும். ஆனால் மோடிக்கு என்னைத் தெரியாது. இதுமாதிரி ஸ்டாலின் சொல்லி விளையாடி இருப்பார். தமிழ்நாடு மாநிலத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எந்த வாக்குறுதியையும் கொடுக்கலாம். ஸ்டாலின் மாமா அப்படி நினைத்து ஏதாவது சொல்லி இருப்பார். இவர்களின் முகத்தை கிழித்து மாநிலம் முழுவதும் நோட்டீஸ் மக்களுக்குத் தரவேண்டும்.
    இவர்களின் ஒவ்வொரு பொய்யை கிராமம் கிராமமாகச் சொல்லி, அவர்களின் உண்மையான நிறத்தை காண்பிக்க வேண்டும். இம்மாதிரி பொய்களை, தி மு க கட்சியின் பித்தலாட்டங்களை, பா ஜ கட்சி முன்னின்று மக்களுக்கு சென்று சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close