செய்திகள்தமிழ் நாடு

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்தி தரணும்! சட்டசபையை அதிரவைத்த எம்.எல்.ஏ !

தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது , டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சட்டசபையில் தனியரசு எம்.எல்.ஏ தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.தமிழக சட்டசபையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு எம்.எல்.ஏ. பேசியபோது

வேளாண் துறை மீதான மானியக் கோரிக்கையின் மீது பேசிய அவர், “மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அந்த காலத்தில் புதுப் படங்களுக்கு டிக்கெட் வாங்குவது எவ்வளவு கடினமோ அதுபோலவே ஒரு பாட்டிலை வாங்குவதற்கு நேரமாகிறது. மேலும் கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. இது மக்களை கொதிப்படைய செய்துள்ளது. கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றன. நாட்டில் எவ்வளோ பிரச்சனை இருக்கிறது அதை பற்றி பேசாமல் நடமாடும் டாஸ்மாக் பற்றி பேசி இருப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close