செய்திகள்தமிழ் நாடு

தொடரும் அதிரடி வேட்டை:நாகையில் ஹாரிஸ் முகமது, அசன் அலி முஸ்லீம் தீவிரவாதிகள் கைது!

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இன்று நாகையில் இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு சென்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது, சிக்கலைச் சேர்ந்த அசன் அலி ஆகியோரது வீடுகளில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பல மணிநேர சோதனைக்குப் பிறகு, செல்போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்குகள், பென் டிரைவ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றை அவர்கள் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஹாரிஸ் முஹம்மது, அசன் அலி ஆகியோரை பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நள்ளிரவு வரை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை சென்னை கொண்டு சென்றனர்.

அவர்கள் இருவரும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்று இந்தியாவில் தாக்குதல் தொடுக்க சதித்திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close