செய்திகள்

குமாரசாமி, காங்கிரசார் பிடியிலிருந்து தங்களைக் காப்பாற்றக்கோரி வேண்டுதல் !! கோவில், கோவிலாக செல்லும் 10 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்

மும்பையில் சொகுசு தனியார் விடுதியில் தங்கியுள்ள ராஜினாமா செய்துள்ள 10 எம்.எல்.ஏ.க்களும் சீரடி உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தியாத்திரை மேற்கொள்கின்றனர். கர்நாடக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் தனியாருக்குரிய சொகுசு விடுதி ஒன்றில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்கள் பாஜகவில் சேர்ந்திடும் வாய்ப்பு உள்ளது இந்த நிலையில் இவர்களை மீண்டும் காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனதா தளம் கட்சியில் இணைத்திட அமைச்சர் டி.கே.சிவகுமார் அவரது சகோதரர் எம்பியான டிகேசுரேஷ் உள்ளிட்ட பலர் பெரும் முயற்சி செய்து இவர்களை ரகசியமாக பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை எந்த வொரு நிகழ்ச்சியும் இல்லாத நிலையில் இவர்களை காங்கிரஸ் தரப்பில் தலைவர்களும் ஜனதாதளம் சார்பில் முதல்வர் குமாரசாமி தரப்பிலும் சந்தித்து மனம் மாற்ற வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் சொகுசு விடுதியே ஆனபோதிலும் சலிப்பு ஏற்பட்டு விடும் நிலையில் விடுதியல் இருப்பதற்கு பதிலாக மகாராஷ்டிர மாநிலத்திலேயே இருந்திடுமே சீரடி சாய்பாபா கோயில் மற்றும் இதர கணபதி கோயில்களுக்கு சென்று திரும்பிட 10 எம்.எல்.ஏக்களும் திட்டமிட்டு பக்தி பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close