இந்தியா

அசாம் வெள்ளத்திலும் அரங்கேறிய அதிசயம் – திருப்பாற்கடலில் விஷ்ணுவும், லட்சுமிதேவியும் பள்ளிகொண்ட காட்சி.!

அசாம் மாநிலத்தில், அதிகப்படியான மழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீமாட்டிகாட் பகுதியில் அபாய கட்டத்தை கடந்த அளவில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், லக்கீம்பூர், தேமாஜி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 43 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதுவரை 12 ஆயிரத்து 643 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அங்கு ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது.

மேற்கண்ட படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த காட்சி, திருப்பாற் கடலும் அல்ல; ஒவியமும் அல்ல. அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கவு காத்தி அருகே காளிபூர் என்ற இடத்தில் உள்ள சக்ரேஷ்வர் கோவில் நீரில் மூழ்கிவிட்டது.

இதையும் படிக்க: கோயில்களில் தற்கொலைபடை தாக்குதல் நடத்த சதித்திட்டம்! கோவையில் கைதான 3 முஸ்லிம் தீவிரவாதிகள் வாக்கு மூலம்!!

கோவில், மூழ்கிய போதிலும், பாம்பின் மீது லட்சுமிதேவியுடன் விஷ்ணு பள்ளிகொண்டிருப்பது போன்ற சிலை மட்டும் இன்னும் மூழ்கவில்லை. சிலையை சூழ்ந்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது, திருப்பாற்கடலில் விஷ்ணுவும், லட்சுமிதேவியும் பள்ளிகொண்டு இருப்பது போல் உள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close