செய்திகள்

கனிமொழி மகனுக்கு ஏன் பெரியார் பெயரை வைக்கவில்லை? குடும்பத்திற்கு ஒரு நியாயம் உலகத்திற்கு ஒரு நியாயம் – நெட்டிசன்களின் நெத்தியடி கேள்வி !!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

தன்னை ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவர், பெரியாரின் வாரிசு என்று முழங்கிவரும் கனிமொழி, அதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் புரபைல் படமாக பெரியாரைத்தான் வைத்து இருந்தார். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திடீரென தனது ட்டுவிட்டர் பக்கத்தில் இருந்த பெரியார் படத்தை தூக்கி எறிந்துவிட்டார். இந்துக்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வந்ததால், இந்துக்களின் ஓட்டு தனக்கு எதிராக திரும்புவதை உணர்ந்த கனிமொழி பெரியாரையே வீசி எறிந்தார்.

அதோடு நில்லாமல், தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டே தூத்துக்குடி மக்களிடம் ஓட்டுகேட்டார். கோயில் கோயிலாகவும் ஏறி இறங்கினார். ஆரத்தி எடுக்காத நாளே இல்லை. இப்படித்தான் அவர் பெரியார் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றினார்.

பெரியார், கடவுள் மறுப்பு இதெல்லாம் மிகப்பெரிய பித்தலாட்டம் என்பதை தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தின்போது, கனிமொழி துளியளவு சந்தேகமும் இல்லாத வகையில் நிரூபித்தார். 

இப்போது மீண்டும் தான் பெரியாரின் பேத்தி என்பது போன்று மீண்டும் பெரியாரை வைத்து பித்தலாட்டத்தில் இறங்கியுள்ளார் கனிமொழி். ஈரோடு ரெயில் நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டுமாம். பாராளுமன்றத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார் கனிமொழி்.

இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்து உள்ளது. அதோடு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

கருணாநிதியின் குடும்ப நிறுவனங்களாக Sun TV, Kalaignar TV, Kalaignar News, Red Giant Movies, Sunshine Matric School போன்றவற்றிற்கு ஏன் பெரியார் பெயரை வைக்கவில்லை? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் எஸ்.ஜி.சூர்யா.

பெரியாரின் மீது அவ்வளவு அக்கறை உள்ள கனிமொழி, தன் மகனுக்கு ஏன் பெரியாரின் பெயரை சூட்டவில்லை? எனவும் நெட்டிசன்கள் கேள்வி கணைகளை தொடர்ந்து வருகின்றனர். விஷ்வநாத் என்பவர், கனிமொழி தன் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு பெரியாரின் பெயரை வைக்கலாம். இதுதான் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதித்யா என்று சமஸ்கிருத பெயரை தன் மகனுக்கு சூட்டிய கனிமொழி, தன் மகனுக்கு பெரியாரின் பெயரை சூட்டி மகிழலாமே? ஏன் அதை செய்யவில்லை? இப்போதும் ஒன்றும் கெட்டுபோய்விட வில்லை. ஆதித்யா என்ற பிடிக்காத சமஸ்கிருத பெயரை உடனே மாற்றி பெரியார் என்ற பிடித்த பெயரை வைக்கலாமே என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இப்படியே, நெட்டிசன்களின் கருத்துக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

கனிமொழியின் பித்தலாட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. அதாவது, “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே…” என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close