செய்திகள்

பா.ம.க. பிரமுகர் இராமலிங்கம் கொலையில் தேனி முஸ்லிமுக்கும் தொடர்பு! என்.ஐ.ஏ. விசாரணையில் அம்பலம் !!

தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம், விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் பா.ம.க. பிரமுகர் இராமலிங்கம். கடந்த பிப்ரவரி மாதம்  5 – ஆம் தேதி முஸ்லிம் மதவெறி கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக 8 முஸ்லிம் மதவெறியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சக உத்தரவுப்படி இராமலிங்கம் படுகொலை வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ. விடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், சில நாட்களுக்கு முன் தென்காசியை சேர்ந்த மைதீன் சாதிக் என்பவனை கைது செய்தனர். கோழிப்பண்ணை அதிபர் என்ற போர்வையில் மறைந்து இருந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வந்த இவனிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஏராளமான பாகிஸ்தான் பணமும் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மைதீன் சாதிக் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜூலை 2 – ஆம் தேதி தேனி, முத்துத்தேவன் பட்டியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இராமலிங்கம் கொலைக்கு பயன்படுத்திய டெம்போ டிராவலர் வேனை பறிமுதல் செய்தனர். அது சென்னை பதிவு எண்ணைக் கொண்டது.

எனவே, சென்னை பதிவு எண்ணை கொண்ட டெம்போ டிராவலருக்கும், முத்துத்தேவன்பட்டியில் அறிவகம் என்ற பெயரில் இயங்கும் முஸ்லிம் மதவெறி மையத்திற்கும் உள்ள தொடர்பு விசாரணையை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் மைதீன் சாதிக் என்பனுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவனிடம் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்றும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

திருபுவனம் இராமலிங்கம் படுகொலை 24 மணி நேரத்தில் முஸ்லிம் மத வெறியர்களால் மிக தெளிவாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று. இந்த மாபாதக படுகொலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நல்லவர்கள் போல் வேஷம் போட்ட பல முஸ்லிம் மத வெறியர்கள் துணையாக இருந்துள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close