இந்தியா

ஐஎம்பிஎஸ் மூலம் பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை – ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிரடி அறிவிப்பு!

டிஜிட்டல் பரிவர்தனையை ஊக்குவிக்கும் வகையில் என்இஎப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் இதனை நடைமுறைபடுத்தி வருகின்றன. 

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடந்த 1 – ஆம் தேதி முதல் இணையதளம், மொபைல்  பேங்கிங் வழியாக செய்யப்படும் என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மொபைல் மூலம் ஐஎம்பிஎஸ்(IMPS) பரிவர்த்தனைக்கு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பதில்லை எனவும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், “டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் முயற்சியாக, இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் வழியாகச் செய்யப்படும் ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி ஆகியவற்றுக்கு சேவைக்கட்டணம் இம்மாதம் 1-ஆம் தேதியில் இருந்து வசூலிக்கப்படாது. மேலும் ஐஎன்பி( INB), எம்பி(MB), யோனோ(YONO) ஆகியவற்றுக்கான ஐஎம்பிஎஸ் கட்டணமும் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியில் இருந்து ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது போல மற்ற வங்கிகளும் அறிவிப்புகளை வெளியிட்டால் நிச்சயமாக இது டிஜிட்டல் பரிவர்தனையை மேலும் ஊக்குவிப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close