செய்திகள்

ரயில்வே தனியார் மயம் ஆகாது! – எதிர் கட்சியினரின் விஷம பிரச்சாரத்திற்கு பியூஷ் கோயல் முற்றுப்புள்ளி !!

பாராளுமன்றத்தில் ரயில்வே துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து, ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரயில்வேயை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. அவ்வாறு தனியார்மயமாக்கவும் முடியாது. எனினும், பயணிகளுக்கு சிறந்த வசதிகளை அளிப்பதற்காக, முதலீடுகள் தேவைப்படுகின்றன. எனவே, புதிய தொழில்நுட்பங்கள், திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக தனியார் முதலீடுகள் கோரப்படும். ரயில்வே துறையில், அரசு-தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வேயின் சில பிரிவுகள், தனி நிறுவனங்களாக மாற்றப்படும்.

1950  முதல் 2014 வரையிலான 64 ஆண்டுகளில் சுமார் 39 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு புதிதாக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7,000 கிமீ தொலைவுக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

சரக்கு ரயில் போக்குவரத்துக்கான தனி வழித்தடத் திட்டப் பணிகள் கடந்த 2007-இல் தொடங்கின. இத்திட்டத்தின்கீழ், 2014-ஆம் ஆண்டு வரை 1 கி.மீ. தொலைவுக்கு கூட தண்டவாளங்களை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 1,900 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளங்களை இணைத்துள்ளோம். 

ரேப ரேலியில் உள்ள அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் கடந்த 2007 தொடங்கி 2014 வரை ஒரு பெட்டி கூட தயாரிக்கப்படவில்லை. 2014 – இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அங்கு முதல் பெட்டி தயாரிக்கப்பட்டது. அந்த தொழிற்சாலையை, உலகிலேயே மிகப் பெரிய ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையாக மாற்ற மத்திய பாஜக அரசு விரும்புகிறது. 

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, ரயில் விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இவ்வாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close