இந்தியா

மால்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது !! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மால்கள்வணிக நிறுவனங்கள்மற்றும் திரையரங்குகள் போன்றவற்றில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும்கார்களுக்கு 30 ரூபாயும் என வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மாநில அரசின் வாகன நிறுத்த விதிகளுக்கு உட்பட்டே வசூலிக்கப்படுவதாக வணிக வளாகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என வணிக வளாகங்களுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து வணிக நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆனந்த் தேவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது குஜராத் நகர திட்டமிடல் மற்றும் நகர வளர்ச்சி சட்டத்தின் கீழ் மால்கள்திரையரங்குகள் போன்ற பெரிய வணிக வளாகங்களில் வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கக் கூடாது என நீதிபதிகள்உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close