செய்திகள்

“மும்பை தொடர் குண்டுவெடிப்பு போல தாக்குதல் நடந்தால் மோடி அரசு பதிலடி கொடுக்கும்” – பியூஸ் கோயல் எச்சரிக்கை !!

நாடாளுமன்ற மாநிலங்களவையில், ரெயில்வே மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரெயில்வே மீது பின்னிரவிலும் விவாதம் நடத்தினோம். இது ஒரு முக்கியமான நாள். எனது சொந்த ஊரான மும்பையில், 2006-ஆம் ஆண்டு இதே நாளில், புறநகர் ரெயில்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

11 நிமிட நேரத்தில் 7 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 209 பேர் பலியானார்கள். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த பதிலடியும் கொடுக்கவில்லை. அது ஒரு வெட்கக்கேடு.

அது 2006. அதே போன்ற சம்பவம், மோடி ஆட்சிக்காலத்தில் நடந்திருந்தால், நாங்கள் உரிய பதிலடி கொடுத்திருப்போம்.

ரெயில்வே பட்ஜெட்டை தனியாக சமர்ப்பிக்காமல், பொது பட்ஜெட்டுடன் இணைத்தது தவறான முடிவு என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், மோடி அரசின் இந்த முடிவை அனைத்து தரப்பினரும் பாராட்டுகிறார்கள்.

பொதுவாக, ரெயில்வே பட்ஜெட், முற்றிலும் அரசியல்ரீதியான பட்ஜெட்டாகவே இருந்தது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும், தொகுதி மக்களை குஷிப்படுத்துவதற்காகவும், நூற்றுக்கணக்கான ரெயில்களும், ரெயில் பாதைகளும் அறிவிக்கப்பட்டன.

ஆதனால், தேச சேவை அடிப்படையில், தனி ரெயில்வே பட்ஜெட்டை கைவிடும் முடிவை பிரதமர் மோடி எடுத்தார்.

இவ்வாறு பியூஸ் கோயல் குறிப்பிட்டார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close