செய்திகள்

சிறுவர்களின் கிரிக்கெட் விளையாட்டு சண்டையை “ஜெய் ஸ்ரீராம்” சொல்ல சொல்லி அடித்ததாக செய்தி பரப்பினர்! ஊடகங்களின் முகத்திரை கிழிந்தது !!

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதராஸாவில் பயிலும் முஸ்லிம் சிறுவர்கள் சிலர் நேற்றுமுன்தினம் சில இந்து சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினர்.

இதில் ஏற்பட்ட தகராறில் இரு பக்கமும் சில சிறுவர்களின் சட்டை கிழிந்துள்ளது. முஸ்லிம் சிறுவர்கள் சிலருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. 

கிரிக்கெட் வியைாடும்போது, சிறுவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்சினையை மத பிரச்சினையாக மாற்றியது ஊடகங்கள்.

அதாவது அந்த கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை, “ஜெய் ஸ்ரீராம்” சொல்ல சொல்லி சிலர் அடித்துள்ளனர். இதில் அவர்களின் சட்டை கிழிந்தது. அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. என்றெல்லாம் கண், மூக்கு, காதுகளை வைத்து ஊடகங்கள் தங்களின் பித்தலாட்ட விளையாட்டை அரங்கேற்றியது. 

போலீஸ் விசாரணையில் உண்மை வெளியே வந்துவிட்டது. அதோடு உன்னாவில் உள்ள ஜூம்மா மசூதியின் இமாம், “கிரிக்கெட் விளையாட்டின் போது சண்டையில் ஈடுபட்ட இந்து சிறுவர்கள் கைது செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். “கிரிக்கெட் விளையாட்டின் போது சண்டையில் ஈடுபட்ட…” என்றுதானே இமாம், குறிப்பிட்டுள்ளார்.

யாராவது அந்த முஸ்லிம் சிறுவர்களை “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் போடச் சொல்லி இருந்தால், உன்னாவ் இமாம், “கிரிக்கெட் விளையாட்டின் போது சண்டையில் ஈடுபட்ட இந்து சிறுவர்கள் கைது செய்யப்படாவிட்டால்… என்றா சொல்லி இருப்பார்? “ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போடச் சொன்ன இந்து சிறுவர்களை கைது செய்யாவிட்டால்…” என்றுதானே மிரட்டல் விட்டுருப்பார்.

தவறான செய்தியை பரப்பிய, அதுவும் மத மோதலை ஏற்படுத்த விஷத்தை கக்கிய ஊடகங்கள், கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல், மறுப்பு செய்திகள் எதுவும் வெளியிடாமல் கடந்து செல்கின்றன.

இது எந்த வகையான ஊடக தர்மம் என்பது தெரியவில்லை!

Source :http:// https://www.opindia.com/2019/07/unnao-madarsa-jai-shri-ram-fake-news/

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close