இந்தியா

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதி மாணவர்களுக்கு 4,800 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு! – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

நடப்பு கல்வி ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதி மாணவர்கள் 4 ஆயிரத்து 800 பேருக்கு எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதில் அளித்து பேசியனார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு ஏறக்குறைய 24,698 இடங்கள் அதிகரிக்கபட்டுள்ளன. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் இளநிலை பிரிவில் 15,815 இடங்களும், முதுநிலைப் பிரிவில் 2,153 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

2019-20 ஆண்டில் 10,565 இடங்களும், முதுநிலைப்பிரிவுக்கு 2,153 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நீ்ட் நுழைவுத் தேர்வு மூலம் வரும் மாணவர்களுக்கு 75 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் பல்வேறு மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதி பிரிவு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் 4,800 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close