இந்தியா

அத்திவரதரை தரிசனம் செய்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்! பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது!!

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நேற்று 11-வது நாளாக அத்திவரதர் காவி நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அத்தி வரதரை தரிசிக்க, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், குடும்பத்தினருடன் விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். 

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி ராம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் காஞ்சிபுரம் வந்தனர். அங்கு, அவரை கலெக்டர் பொன்னையா வரவேற்றார்.

தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். கோயிலில், ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதியுடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் உதயகுமார் உடன் வந்தார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோயிலை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள், தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது.

PC: Dinamalar

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close