சமூக ஊடகம்தமிழ் நாடு
Trending

60 ஆண்டுகால திராவிட ஆட்சி கண்ட தமிழ்நாட்டில் அடுத்த வேளை உணவு என்பதே உண்டா என்று தீர்மானிக்கும் நிலையில் பல குடும்பங்கள் இல்லை : கனிமொழியை கிழித்து தொங்கவிட்ட நடிகை கஸ்தூரி

நாகை மாவட்டம் பொரவச்சேரி பகுதியை சேர்ந்தவர் முகம்மது பைசான். இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், பைசானின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் பதிவு போட்டதே இந்த தாக்குதலுக்கு காரணம் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தாக்குதலில் காயமடைந்த பைசான், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை பயன்படுத்தி தமிழர்களிடையே மதவெறியை விதைக்கும் நோக்கில், தமிழக ஊடகங்களும், சில அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இஸ்லாமிய பெண்ணின் இந்து நண்பர்களை மதம் மாற வற்புறுத்தி, கோவையில் அரங்கேறிய மதவெறி சம்பவம் குறித்து எந்த அரசியல் கட்சியும் தமிழக ஊடகங்களும் வாயை திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : இஸ்லாமிய பெண்ணின் இந்து நண்பர்களை மதம் மாற வற்புறுத்தி சித்ரவதை !! கோவையில் அரங்கேறிய மதவெறி : மயான அமைதி காக்கும் தமிழக ஊடகங்கள்

இந்த நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றிற்கு நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்துள்ளார். கனிமொழி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், “எதை உண்பது என்பதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல. Food is our choice and no one can tell what we should eat.”, என்று பதிவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி, “60 ஆண்டுகால திராவிட ஆட்சி கண்ட தமிழ்நாட்டில் அடுத்த வேளை உணவு என்பதே உண்டா என்று தீர்மானிக்கும் நிலையில் பல குடும்பங்கள் இல்லை. எனக்கு தெரிந்த சில மதங்களில் உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த மதங்களை குறை சொல்கிறாரா கனிமொழி அவர்கள்?”, என்று கேள்வி கேட்டு கனிமொழியை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

ஹிந்து மதத்தை இழிவுபடுத்தினால் கேள்வி கேட்க யாருமில்லை எந்த தைரியத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஹிந்து மத வெறுப்பு விதைக்கப்பட்டு வருகிறது. பிற மதங்களிலும் உணவு கட்டுப்பாடு உண்டு, பிற மதங்களிலும் மதவெறியாளர்கள் அக்ரமங்களை அரங்கேற்றி வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் செய்தியாக்காத தமிழக ஊடகங்கள், அதை சிறிதும் கண்டிக்காத அரசியல் கட்சிகள் ஹிந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்துவது வாடிக்கையாகிவிட்டது என்பது ஹிந்துக்களின் கருத்தாக இருக்கிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close