செய்திகள்

அத்திவரதரை 12 நாளில் 15 லட்சம் பேர் தரிசனம்! 7 கி.மீ. நீண்ட வரிசையில் பக்தர்கள் வெள்ளம் !!

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1 – ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 17 – ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். கடந்த 12 நாட்களில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) விடுமுறை என்பதால் காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள், சுமார் 7 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து வருகின்றனர். இதுபோல ஆன்மீக சுற்றுலாவாகவும் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close