செய்திகள்தமிழ் நாடு

அப்பாடா சென்னை வந்தது தண்ணீர் ரயில்!

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தற்காலிகமாக போக்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜோலார்பேட்டையில் இருந்து, 1 கோடி லிட்டர் தண்ணீர் இரயில் மூலம் சென்னை கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை ஜோலார்பேட்டையிலிருந்து 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. வாழை மற்றும் மலர் தோரணங்கள் கட்டி, பூஜை செய்து தண்ணீர் ரயிலை அலுவலர்கள் அனுப்பி வைத்தனர் . இந்த ரயில் சென்னை வில்லிவாக்கம் இன்று காலை 11.30 மணியளவில் வந்து சேர்ந்தது.

தினசரி, நான்கு சுற்றுகள் அடிப்படையில், 1 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்படும்.ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், கலன்களில் நீர் நிரப்பப்பட்ட, ரயில் இன்று காலை 7.30 மணியளவில் புறப்பட்டது. பகல், 11. 30 மணிக்கு, வில்லிவாக்கம் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரித்து வினியோகிக்கப்படும்.
50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் மூலம் 4 முறை கொண்டு வரப்படும். வீராணம் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்ட அதிமுக அரசு தற்போது ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவந்து சென்னை மக்களின் தாகத்தை தணிக்கின்றனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close