தமிழ் நாடு

எட்டு வழிச்சாலை எதுக்கா.? பல ஆயிரம் குடும்பங்களை காப்பாற்றிய தமிழகத்தின் முயற்சி – வெளியான விவரம்.!

சாலை விபத்துகளை குறைக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பதில் அளித்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி , நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் காண ரூ.14 ஆயிரம் கோடியில் திட்டத்தை வகுத்துள்ளதாகவும். இதன்மூலம் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: டிஜிட்டல் கிராமம், 100 நாட்களில் 1000 கி.மீ நெடுஞ்சாலை : கிராமப்புரங்களை மேம்படுத்த அசத்தல் திட்டங்களுடன் மோடி அரசு தயார்

இத்திட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.சாலை விபத்துகளை குறைக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை. தமிழகத்தில் சாலை விபத்துகள் 15 சதவீதம் குறைந்துள்ளன.மற்ற மாநிலங்களில் 1.5 சதவீதம்தான் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள் மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வரை இந்தியாவிலேயே சாலை விபத்தில் அதிகபேர் பலியாகும் மாநிலமாக தமிழகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close