செய்திகள்

முழங்காலிட்டு ஜெபம் செய்ய வைத்தார்! வகுப்பறையை கிறிஸ்தவ “சர்ச்” ஆக மாற்றிய ஆசிரியை! அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?

மாணவர்களிடம் மத மாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட ஆசிரியை மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா கொல்லங்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட தாண்டாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இங்கு 79 மாணவ – மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக செந்தமிழ் செல்வியும், நான்காம் வகுப்பு ஆசிரியையாக ஜோஸ்லின் கிரேஷ் (வயது 48)  என்பவரும் உள்ளனர்.

ஆசிரியை ஜோஸ்லின் கிரேஷ், சில நாட்களாக மாணவ – மாணவிகளிடம் கிறிஸ்துவ மத பாடல்களை பாட வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர்களுக்கு கிறிஸ்துவ மதம் குறித்த புத்தகங்களையும் வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல்  ஏசுவை ஜெபம் செய்ய வேண்டும் என்று கூறி மாணவ – மாணவிகளை கட்டாயப்படுத்தி உள்ளார். அவர்களை முழங்காலிட்டு ஜெபம் செய்ய வைத்துள்ளார். 

இது குறித்து மாணவ – மாணவிகள் தங்களின் பெற்றோரிடம், புகார் தெரிவித்தனர். இதனால் அனைத்து பெற்றோர்களும் ஒன்று சேர்ந்து தலைமையாசிரியை செந்தமிழ் செல்வியிடம் புகார் செய்தனர்.  அவரும் கிறிஸ்தவர் என்பதால் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் பெற்றோர்களின் புகாரை உதாசீனப்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்களும், பொதுமக்களும், மாணவர்களிடம் கிறிஸ்தவ மத மாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். 

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பள்ளியில் மாணவ – மாணவிகளிடம் கிறிஸ்தவ மதமாற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியை ஜோஸ்லின் கிரேஷ் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து பெற்றோர்களும், பொது மக்களும் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close