செய்திகள்

அசைவம் சாப்பிடும் தட்டுக்களில் ஐயர்கள் படங்கள்!! ஹோட்டல் நிர்வாகத்தை பணியவைத்த பிராமணர் சங்க செயல் வீரர்கள் இவர்கள்தான் !!

சென்னையில் பிரதான இடமான மவுண்ட் ரோட்டில், மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில், பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில்,அசைவம் சாப்பிடும் பிளேட்டுகளில் பிராமணர் உருவத்தில் கேலி சித்திரம் வரைந்து படங்கள் இருந்தன.  ஜூலை-6 சனிக்கிழமை இரவு ஓட்டலுக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் பார்த்து விட்டு கோபப்பட்டு ஓட்டல் ஊழியர்களிடம் புகார் செய்தார்.  சென்ற ஞாயிற்றுக்கிழமை முழுவதும் Facebook  மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது.

இதைக் கண்ட பிராமணர்கள் அனைவரும் வருத்தம் அடைந்தனர். திங்கட்கிழமை அன்று மதியம் ஓட்டலுக்கு நேரடியாக சென்ற ஐந்து பிராமணர் சமூக பிரதிநிதிகள் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்தவுடன், ஓட்டல் நிர்வாகம் அடிபணிந்தது. திங்கட்கிழமை அன்று அனைத்து பிளேட்டுகளையும் அகற்றியது, செவ்வாய்க்கிழமை அன்று பிராமண சமூக பிரதிநிதிகளை ஓட்டலுக்கு வரவழைத்து மன்னிப்பு கடிதம் நேரில் வழங்கியது.                                                         

இந்த போராட்டத்தில்  கலந்து கொண்ட  பிராமண சமூக போராளிகள் அம்பத்தூர் பிரகாஷ், பம்மல் சீனிவாசன், மைலாப்பூர் ரவிசங்கர், கவிஞர் முத்துராமன், டைகர் பால்கி, ஆகிய ஐந்து பிராமணர் சங்க செயல்வீரர்களுக்கு அனைத்து பிராமணர்கள் சார்பாக அன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close