செய்திகள்

உடல் நலத்தை இயற்கையாக காப்பாற்றிக் கொள்வதில் மோடிதான் உலகத்திலேயே சூப்பர் ஒன் -1 : அமெரிக்க உடற்பயிற்சி நிறுவனம் தேர்வு !!

உடல் நலத்தை பேணுவதில் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘டாப்’-30 இந்திய பிரபலங்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜி.ஓ.க்யூ.ஐ.ஐ. என்ற உடற்பயிற்சி நிறுவனம் உடல் நலத்தை அக்கறையுடன் இயற்கையுடன் பேணுவதில் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது ‘டாப்’-100 இந்திய பிரபலங்களை சமீபத்தில் தேர்ந்தெடுத்தது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களில் இவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் கூகுள் இணையத்தில் இவர்களது உடற்பயிற்சி பழக்க வழக்கங்களை குறித்து வெளியான செய்திகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் இருந்து 30 பெயர்கள் இறுதி செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தினை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தினை பாலிவுட் நடிகரான அக்ஷய் குமாரும்,மூன்றாவது இடத்தினை யோகா குரு பாபா ராம் தேவும் பிடித்துள்ளனர்.


இவர்களை தவிர பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங் , கரீனா கபூர்,பிரியங்கா சோப்ரா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோர் ‘டாப்’-10 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்த பட்டியலில் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரும்,டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயல் இயக்குனருமான நடராஜன் சந்திரசேகரன் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் உள்ள ஒரே தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close