இந்தியா

271 மில்லியன் மக்கள் வறுமை கோட்டை தாண்டி வளர்ச்சி பெற்று விட்டார்கள் – இந்தியாவை பாராட்டி தள்ளும் ஐ.நா சபை.!

இந்தியாவில் பல பரிமாணத்தில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து உள்ளதாக சமீபத்தில் வெளியாகிய யு.என்.டி.பி(UNDP) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளான 104 நாடுகளில் 662 மில்லியன் குழந்தைகள் பல பரிமாணத்தில் வறுமையில் சிக்கி உள்ளனர், 36 நாடுகளில் பாதிக்கு நிகரான குழந்தைகள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வுக் கூறுகிறது.

சர்வதேச அளவில் மொத்தம் 1.3 பில்லியன் மக்கள் பல பரிமாண வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். இது 104 நாடுகளில் உள்ள மக்கள் தொகையில் கால் பங்கு என ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. பல பரிமாண வறுமையில் சிக்கி வாழும் மக்கள் பல வளரும் நாடுகளிலும் உள்ளனர். எனினும், குறிப்பாக துணை சஹாரா மற்றும் தெற்கு ஆசியாவில் மட்டும் 83 சதவீத மக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

2018 ஆய்வானது சுத்தமான குடிநீர், சுகாதாரம், போதிய ஊட்டச்சத்து மற்றும் தொடக்கக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

.இந்தியாவில் 2005-06 மற்றும் 2015-16 வரையிலான காலக்கட்டத்தில் பல பரிணாமத்தில் வறுமையில் சிக்கி இருந்த 271 மில்லியன் மக்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர். 10 வருடத்தில் மட்டும் இந்தியாவில் வறுமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து உள்ளது. இந்தியா வறுமை விகிதத்தை 55% இல் இருந்து 28% சதவீதமாக குறைத்துள்ளது.

ஜார்கண்ட் சிறப்பிடம்:

சுகாதாரம், உணவு முறை, சொத்துக்கள், சமையல் சாதனங்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், 74.9 சதவீதமாக இருந்த வறுமைக்கோட்டிற்கு கீழாக இருந்த மக்களின் வாழ்க்கைத்தரம், இந்த 10 ஆண்டுகளில் 46.5 சதவீதமாக மாறியுள்ளது. இந்தியாவில், பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மக்களின் வாழ்க்கைத்தரம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. ஜார்க்கண்டில் தான், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த மக்களின் வாழ்க்கைத்தரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த MPI அளவீட்டின்படி, இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த மக்களின் சதவீதம் 55.1 சதவீதம் என்ற அளவிலிருந்து 27.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அதாவது வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த மக்கள்தொகை 640 மில்லியன் என்ற அளவிலிருந்து 369 மில்லியன்களாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளில் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையில் பல மாறுதல்கள் உருவாகினாலும், அதன் வழி மாறாமல் வறுமை ஒழிய நாட்டில் பல திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close