செய்திகள்

“8 வழி சாலை வந்தால், புதிய தொழிற்சாலைகள் வரும், அதிமுக ஆட்சிக்கு நற்பெயர் கிடைத்துவிடும். எனவேதான் எதிர்க்கின்றனர்” – முதல்வர் பழனிச்சாமி !!

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:-

கடந்த 2010 – ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரசும், மாநிலத்திலும் திமுகவும் ஆட்சி செய்தபோதுதான் நீட்  தேர்வு கொண்டு வரப்பட்டது.  தற்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வந்த காரணத்தால், மக்களிடம் தப்பித்துக் கொள்வதற்காக அந்த பழியை எங்கள் மீது சுமத்துகின்றனர். 

எட்டுவழிச்சாலை திட்டமானது மத்திய அரசின் திட்டம். கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் கோரள மாநிலம் கொச்சின் வரை இந்த விரைவுச் சாலை செல்கிறது. மத்திய அரசு ராணுவத்திற்கு உதிரிபாகம் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகள் இப்பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற புதிய தொழில்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால்தான் வெளிமாநிலங்கள், நாடுகளில் இருந்து தொழில்துறையில் முதலீடு செய்ய  வருவார்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் இந்த சாலையை மத்திய அரசு அமைக்கிறது. இதனை பலர் எதிர்க்கின்றனர். 

இதே திமுக ஆட்சியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்த போது,  734 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டது. அப்போது மக்களிடம் விவசாய நிலங்களை எடுத்தே சாலை போடப்பட்டது. இந்த திட்டம் வந்தால் அதிமுக ஆட்சிக்கு நற்பெயர் கிடைத்துவிடும் எனக்கருதி  திட்டத்தை எதிர்க்கின்றனர். எந்த வகையிலும் விவசாயம் பாதிக்கக்கூடாது என கருதிதான் இந்த திட்டத்தை அமல்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். இந்த திட்டத்திற்கு பல முட்டுக்கட்டைகள் வந்து கொண்டிருக்கிறது. அதை மத்திய அரசு சந்திக்கிறது. 

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். நிச்சயமாக எங்களது கூட்டணி  வேட்பாளர் வெற்றி பெறுவார்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close