செய்திகள்

சிக்கன் பிரியாணி, சப்பாத்தி செய்து சிறை கைதிகள் அசத்தல்! மொபைல் ஆப் மூலம் கேரளாவில் வியாபாரம் !!

கேரளாவில் திருச்சூர் உள்ள விய்யூர் மத்திய சிறைச்சாலையில் Freedom Food Factory என்ற பெயரில் ஒரு உணவகம் கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை நடத்துபவர்கள் அனைவருமே சிறை கைதிகள்தான்.

இங்கு சிக்கன் பிரியாணி, சப்பாத்தி உள்பட பலவகையான உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன.

தற்போது இந்த உணவகத்தின் வாயிலாக தினமும் 500 முதல் 700 பிரியாணிகள் வியாபாரம் ஆகிறது. தினமும் 25000 சப்பாத்திகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறைச்சாலையில் உள்ள 100 ஆண் கைதிகள் இந்த உணவு தயாரிக்கும் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த சிறைச்சாலையில் உள்ள பெண்களுக்கான பிரிவில் உள்ள பெண் கைதிகளும் உணவு தயாரிக்கின்றனர். அவர்கள் கேரளாவின் பாரம்பரிய நொறுக்குத்தீனிகளை தயாரித்து வழங்கி வருகின்றனர்.

இங்கு சமைத்து வழங்கப்படும் உணவுகள், சுவையாகவும் தரமாகவும் இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். திருச்சூர் வாசிகளுக்கு இந்த சிறைச்சாலை உணவக உணவின் மீது பிரியம் அதிகம்.

இந்த உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு வகைகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்தனர். swiggy மொபைல் ஆப் மூலமாக திருச்சூர் மக்களுக்கு இந்த சேவை வழங்கப்பட உள்ளது. 

Swiggy மூலம் வழங்கப்படும் காம்போ உணவில், 300 கிராம் எடை உள்ள பிரியாணி, மூன்று சப்பாத்திகள், சிக்கன் லெக் ப்ரை 1, சிக்கன் கரி சாலட், பிக்கில், ஒரு பிராண்டட் குடிநீர் பாட்டில், ஒரு கப் கேக், இவை அனைத்தும் வெறும் 127 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. உணவை சுவைத்து ரசித்து சாப்பிடுவதற்கு வசதியாக ஒரு வாழை இலையும் இத்துடன் வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து இந்த சிறைச்சாலையில் சூப்பிரண்டு நிர்மலநாதன் நாயர் கூறும்போது, “தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு நாங்களும் இங்கு தயாரிக்கப்படும் உணவுகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்ற வகையில் ஆன்லைன் மூலம் வியாபாரத்தை தொடங்கி உள்ளோம். முதல் கட்டமாக அறிமுகம் செய்யும் காம்போ உணவிற்கு உள்ள வரவேற்பைப் பொறுத்து தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு காம்போ உணவுகளை வழங்க இருக்கிறோம்” என்றார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close