செய்திகள்
Trending

இஸ்லாமிய பெண்ணின் இந்து நண்பர்களை மதம் மாற வற்புறுத்தி சித்ரவதை !! கோவையில் அரங்கேறிய மதவெறி : மயான அமைதி காக்கும் தமிழக ஊடகங்கள்

கோவை கரும்புக்கடை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண் நிஷா வயது 20. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். நிஷா கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். பின்னர் இந்து மதத்தைச் சேர்ந்த ஆண் நண்பருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். வீட்டினருகே நிஷா வந்தபோது, ஷபியுல்லா மற்றும் இப்ராஹிம் ஆகியொர் வழிமறித்தனர்.

“நீ இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண், எப்படி ஆண் நண்பர்களுடன் வாகனத்தில் வரலாம்?”  என்று கூறி நிஷாவை மிரட்டினர்.  இதைப் பார்த்த அவரது தாயாரும் அங்கு வந்துள்ளார். அவரிடம், “இஸ்லாம் முறைப்படி உன் மகளுக்கு நூறு கசையடி வழங்க வேண்டும்” என்று கூறியதோடு, அவர்களின் பெல்ட்டை கழட்டி கொடுத்து அடிக்கக் கூறியுள்ளனர். பயந்து போன அவர் தனது மகள் நிஷாவை பெல்ட்டால் நூறு முறை அடித்துள்ளார். 

பின்னர், நிஷாவை போகச்சொல்லிவிட்டு அவரது ஆண் நண்பர்களை அருகிலுள்ள ஒரு கடையில் அடைத்து வைத்து மதம் மாறக்கூறி ஐந்து மணி நேரம் அடித்து உதைத்துள்ளனர். கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு, பீளமேட்டிலுள்ள அவரது பெற்றோர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பிரச்சனை வேறு திசையில் செல்வதை உணர்ந்த நிஷாவின், தாயாரும், அவரது குடும்பத்தினரும் கோவை மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் சுமித்சரனை சந்தித்து புகார் அளித்துள்ளனர். கோவை மாநகர காவல்துறை ஆணையரின் உத்திரவின் பேரில், வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் காவல் துறையினர், கரும்புக்கடை பகுதியில் வசிக்கும் அலி என்பவரது மகன் ஷபியுல்லா, மற்றும் கோவை குனியமுத்தூர், குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த சுலைமான் என்பவரின் மகன் இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களால் சித்ரவதை செய்யப்பட்ட 2 இந்து இளைஞர்களும் மீட்கப்பட்டனர்.

இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும்போதே இந்த நாட்டில் இந்துக்களுக்கு இந்த நிலையா? என்கிறன்றனர் நடுநிலையாளர்கள். வேறு ஏதோ மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களை மதவெறி என்ற பெயரில் சித்தரித்து செய்தியாக வெளியிட்டு விவாதம் நடத்தும் தமிழக ஊடகங்கள், இந்த விஷயத்தில் மயான அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close