சினிமாசெய்திகள்

மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரமும் கலக்கப் போகிறார்.!!

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடுத்ததாகப் படமாக்கவுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

செக்கச் சிவந்த வானம் படத்துக்கு அடுத்ததாக மணி ரத்னம் இயக்கவுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

மணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் உறுதி செய்தார். இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதை விக்ரமும் உறுதி செய்துள்ளார். மணி ரத்னம் இயக்கும் அடுத்தப் படத்தில் நான் நடிக்கிறேன். அடுத்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close