அரசியல்செய்திகள்

7 வாரங்கள் ஆகியும் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத காங்கிரஸ்! விரக்த்தியில் தொண்டர்கள்! மூழ்கும் காங்கிரஸ் கப்பல் கரைசேருமா?

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2014 – ஆம் ஆண்டைப் போல் இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாமல் போனது. கடந்த 2014 – ஆம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.

இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கடந்த மாதம் 25 – ஆம் தேதி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். காரியக் கமிட்டி கூடி அடுத்த தலைவரை தேர்தெடுக்கும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியாவும் ராஜினாமா செய்துள்ளார்.

இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபால் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் பதவியை, ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்டதால், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கெனவே 7 வாரகாலம் கடந்து விட்டன. இனியும் தாமதிக்காமல் விரைவாக முடிவு எடுக்க வேண்டும். காரியக் கமிட்டி உடனடியாக கூடி அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு தலைவரை தேர்வு செய்வதற்கு கூட லாயக்கு இல்லாத நிலையில் காங்கிரஸ் இருப்பது, தொண்டர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மூழ்கும் கப்பலாக காங்கிரஸ் உள்ளது. இந்த நிலையில் தலைமை இல்லாததால் குழப்பங்களும் அதிகமாகி உள்ளது. இது கரை சேருமா என்பதே கேள்விக்குறியாக ஆகிவிட்டது.

இதனால்தான், கர்நாடகாவில் எம்எல்கள் ராஜினாமாக செய்கின்றனர். கோவாவில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்கின்றர். இந்த உண்மையை மறைப்பதற்கு, பாஜகவின் மீது பழியை போடலாம். ஆனால், உண்மை என்ன எப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் எப்படி தெரியாமல் போகும்?

இப்படியே இது தொடர்ந்தால் அடுத்து மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close