Loading...
சமூக ஊடகம்
Trending

புறநானூறு என்ற வார்த்தையை கூட சரியாக பதிவிடாத தமிழக ஊடகங்கள் : நெட்டிசன்கள் கிண்டல்

மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி மக்களின் நலனுக்கேற்ப எவ்வாறு சிறந்து விளங்குகிறது என்பதை மேற்கோள் காட்ட பிசிராந்தையாரின் புறநானூறு பாடலை முன்னுதாரணமாக எடுத்துக் கூறி பேசினார்.

அப்போது யானை புகுந்த நிலம் போல என்ற பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா அந்தப் பாடலை பாடினார்.
அந்த பாடலாவது: 
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,    5
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
என்று கூறி அதற்கு விளக்கமும் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் பெண் சிங்கம் தமிழில் கர்ஜித்த அந்த காணொளி வைரல் ஆனது. மத்திய நிதி அமைச்சர் பேசிய அந்த காணொளியை செய்தியாக வெளியிட்ட பிரபல தமிழக ஊடகங்கள், புறநானூறு என்ற வார்த்தையில் பிழை செய்தது. அதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close