Loading...
அரசியல்செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது! 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் பதவி விலகல் !!

கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 105 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 113 எண்ணிக்கையை பாஜக எட்டவில்லை.

பாஜக ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக 79 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ், 38 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்துள்ள தேவகவுடா மகன் குமாரசாமியை (மதசார்பற்ற ஜனதா தளம்) முதல்வராக்கியது.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு உமேஷ்ஜாதவ் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பு வழங்கியது. அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகிய 2 பேரும் திடீரென்று ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 117-ஆக குறைந்து விட்டது.

ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் ஏற்கனவே சபாநாயகர் ரமேஷ் குமார் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறினார். இதைத்தொடர்ந்து கர்நாடக கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஆனந்த்சிங் வழங்கினார். 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது கர்நாடக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏப்படுத்தி உள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close