Loading...
அரசியல்செய்திகள்

திமுக இளைஞரணி செயலாளராக 3 – ஆம் கலைஞர், உதயநிதி தேர்வு! வளர்பிறையில் இளவரசராக முடிசூட்டப்பட்டார் !!

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கட்சி என்று சுயதம்பட்டம் அடித்துவரும் திமுகவின் இளைஞரணி செயலாளராக மூன்றாம் கலைஞரான உதயநிதி ஸ்டாலின், வளர்பிறையும், சுபமுகூர்த்த தினமுமான இன்று முடிசூட்டப்பட்டார். இதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருபதாவது: –

திமுக இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றி வரும் மு.பெ.சாமிநாதனை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமைக்கழகத்தால் நியமிக்கப்படுகிறார். 

இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.

“திமுகவில் 3 தலைமுறைகளாக உழைத்து ஓடாய் தேய்ந்துபோனவர்கள் ஏராளமானோர் உள்ளனர். திமுகவின் மொழி போராட்டத்தில் உயிரை விட்டவர்களும் பலர். அவர்களின் வாரிசுகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பது கூட யாருக்கும் தெரியாது. ஆனால், ஸ்டாலின் மகன் – கருணாநிதியின் பேரன் என்ற ஒரே தகுதியைத்தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞரணி செயலாளராக மகுடம் சூட்டப்பட்டுள்ளார். இதற்காகவே இளைஞர் அணி செயலாளராக இருந்த சாமிநாதனை ராஜினாமா செய்ய வைத்தனர்.” என்கின்றனர் திமுகவின் மூத்த தொண்டர்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close