செய்திகள்

கோயில்களில் தற்கொலைபடை தாக்குதல் நடத்த சதித்திட்டம்! கோவையில் கைதான 3 முஸ்லிம் தீவிரவாதிகள் வாக்கு மூலம்!!

இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் 21 – ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் 250 – க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500 – க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கர வாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த 12 – ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தி்ல் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 2 பேரை அவர்கள் கைது செய்தனர். 3 பேருக்கு சம்மன் அனுப்பி கொச்சிக்கு வரவழைத்து விசாரித்து வருகிறார்கள். 

இதற்கிடையில் கோவையை சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்ஐசி) போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

அதன்பேரில் கடந்த 13 – ஆம் தேதி கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான் (25), கோவை வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன்(25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சபியுல்லா (36) ஆகிய 3 பேரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 3 பேரும் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றி வருவது தெரிய வந்தது. போலீசாரின் சோதனையில் 3 பேரின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள், சிம் கார்டுகள், கணினி ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ், மெமரி கார்டுகள் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை பற்றிய கையேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அவர்கள் 3 பேரையும் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தி்ல் உள்ள நுண்ணறிவு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, 3 பேரின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணயில் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானது. மேலும் இவர்கள் கோவையில் உள்ள கோயில்களில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close