செய்திகள்

29 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு குட்பை! விடை பெறுகிறார் மன்மோகன்சிங்!!

1991 ம் ஆண்டு அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங் அந்த தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். கடந்த 2004 -ம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராகவும் , மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவிவகித்தார்.

இந்நிலையில்,மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை பதவிக்காலம் 2 நாட்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. அசாம் மாநிலத்திலிருந்து மீண்டும் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதற்கு போதுமான பலம் காங்கிரஸிடம் இல்லை. எனவே,அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் , காங்கிரஸ் கட்சியினர் எதாவது ஒரு எம்.பி-யை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு அந்த இடத்திற்கு மன்மோகன் சிங்கை கொண்டுவரலாம் ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என தெரியவருவதால் , மன்மோகன் சிங் அப்செட் ஆகியுள்ளாராம்.  மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் , நாடாளுமன்றத்தில் அவரின் பங்களிப்பும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.

தோல்வியைக் கண்டு சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய அனைவருமே நம்பிக்கை இல்லாமல் துவண்டுபோயுள்ளனர். இது இவருக்கு பிடிக்கவில்லை. மேலும் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களே காங்கிரஸ் தோற்க காரணம் என அடிக்கடி ராகுலும், பிரியங்காவும் கூறுவதால் இவர் மன வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கட்சி தொடர்பான உயர் நிலைக் கூட்டங்களுக்கு கூட இவரையே பொறுப்பாக்கி ஜகா வாங்குகின்றனர். அதிக ஊழல் வழக்குகளை சந்தித்து வரும் அவர்கள் தொடர்ந்து ஜாமீன் பெற்றே வெளியில் உள்ளனர். இந்த நிலையில் தன்னாலும் முன்பு போல இயங்க முடியாததால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்ற முடிவை அவர் நெருங்கிக் கொண்டிருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close